மதுரையில் நீதிபதி இல்லம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்ட பா.ஜ.க. நிர்வாகி உட்பட 43 பேர் மீது வழக்குப்பதிவு


மதுரையில் நீதிபதி இல்லம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்ட பா.ஜ.க. நிர்வாகி உட்பட 43 பேர் மீது வழக்குப்பதிவு
x

மாநகர மாவட்ட பா.ஜ.க. தலைவர் உள்பட அக்கட்சியின் 43 பேர் மீது தல்லாகுளம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மதுரை,

மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் குறித்தும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குறித்தும் மோதலைத் தூண்டும் வகையில் டுவிட்டரில் பதிவிட்ட பா.ஜ.க. மாநிலச் செயலாளர் எஸ்.ஜி.சூர்யா கைது செய்யப்பட்டு 15 நாட்கள் நீதிமன்ற காவலில் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நீதிபதி இல்லம் முன்பாக திரண்ட பா.ஜ.க.வினர், போலீஸ் வாகனத்தை மறித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். இதையடுத்து அவர்களை போலீசார் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இந்நிலையில் நீதிபதி இல்லம் முன்பு அனுமதியின்றி சாலை மறியலில் ஈடுபட்ட மதுரை மாநகர மாவட்ட பா.ஜ.க. தலைவர் உள்பட அக்கட்சியின் 43 பேர் மீது தல்லாகுளம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.




Next Story