அனுமதியின்றி பட்டாசு தயாரித்த 8 பேர் மீது வழக்குப்பதிவு


அனுமதியின்றி பட்டாசு தயாரித்த 8 பேர் மீது வழக்குப்பதிவு
x

சிவகாசி பகுதிகளில் அனுமதியின்றி பட்டாசு தயாரித்த 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

விருதுநகர்

சிவகாசி துணை போலீஸ் சூப்பிரண்டு தனஞ்செயன் உத்தரவின் பேரில் சிவகாசி உட்கோட்ட போலீசார் அனுமதியின்றி பட்டாசு தயாரிப்பதையும், பதுக்கி வைப்பதையும் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்கள்.

இந்தநிலையில் சிவகாசி கிழக்கு சப்-இன்ஸ்பெக்டர் சுரேந்திரகுமார் மற்றும் போலீசார் பேராபட்டி பகுதியில் உள்ள ஒரு பட்டாசு ஆலையில் திடீர் ஆய்வு செய்தனர்.

அப்போது அங்கு அனுமதிக்கப்பட்ட அறைகளில் பட்டாசுகளை தயாரிக்காமல் திறந்தவெளி பகுதியில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து ரூ.8 ஆயிரம் மதிப்புள்ள பட்டாசுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து சிதம்பரம், பரமசிவம், சரவணவேல், பொன்னுச்சாமி ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதேபோல் சப்-இன்ஸ்பெக்டர் மொய்தீன் அப்துல்காதர் மற்றும் போலீசார் நடத்திய திடீர் சோதனையில் பேராபட்டி பகுதியில் உள்ள ஒரு பட்டாசு ஆலையில் திறந்தவெளி பகுதியில் பட்டாசு தயாரித்தது தெரியவந்தது.

இதை தொடர்ந்து வெயில்முத்து, ரவிசங்கர் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் ரூ.6 ஆயிரம் மதிப்புள்ள பட்டாசுகளை பறிமுதல் செய்தனர். சப்-இன்ஸ்பெக்டர் மாடசாமி நடத்திய சோதனையில் திறந்த வெளி பகுதியில் பட்டாசு தயாரிக்க தொழிலாளர்களை அனுமதித்த ராஜ்குமார், குருசாமி ஆகியோர் மீது சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

1 More update

Next Story