அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரிய வழக்கு ; நாளைக்கு ஒத்திவைத்தது சென்னை ஐகோர்ட்


அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரிய வழக்கு ;  நாளைக்கு ஒத்திவைத்தது சென்னை ஐகோர்ட்
x

அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரிய ஓபிஎஸ் வழக்கை நாளைக்கு சென்னை ஐகோர்ட் ஒத்திவைத்து உத்தரவிட்டது.

சென்னை,

அதிமுக பொதுக்குழு நடத்த தடை விதிக்கக் கோரி சென்னை ஐகோர்ட்டில் ஓ.பன்னீர் செல்வம் தரப்பு தாக்கல் செய்த மனு இன்று பிற்பகல் விசாரணைக்கு வந்தது. மிகவும் பரபரப்பாக இந்த வழக்கின் விசாரணை நடைபெற்றது. வழக்கு விசாரணையின் போது பல்வேறு கேள்விகளை சென்னை ஐகோர்ட் எழுப்பியது.

  • பொதுக்குழுவை கூட்ட தலைமைக் கழக நிர்வாகிகளுக்கு அதிகாரம் உள்ளதா?
  • எத்தனை நாட்களுக்கு முன் பொதுக்குழு நோட்டீஸ் அனுப்பப்பட வேண்டும்?
  • பொதுக்குழு நோட்டீசில் கையெழுத்திடுவது யார்?
  • ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகிவிட்டதா?

போன்ற கேள்விகளை அடுக்கடுக்காக எழுப்பிய சென்னை ஐகோர்ட், விரிவான பதில்மனு தாக்கல் செய்ய ஈபிஎஸ் தரப்புக்க உத்தரவிட்டுள்ளது. மேலும், வழக்கின் விசாரணை நாளை பிற்பகல் 2.15 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


Next Story