போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகள்


போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகள்
x
தினத்தந்தி 2 Oct 2023 6:51 PM GMT (Updated: 2 Oct 2023 6:51 PM GMT)

சீர்காழி நகர் பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளை பிடித்து அப்புறப்படுத்த வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மயிலாடுதுறை

சீர்காழி:

சுற்றித்திரியும் கால்நடைகள்

சீர்காழி நகர் பகுதிக்கு உட்பட்ட தென்பாதி, புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், தேர் மேல வீதி, ஈசானிய தெரு, ெரயில்வே ரோடு, கொள்ளிடம் முக்கூட்டு, சிதம்பரம் சாலை, அரசு ஆஸ்பத்திரி சாலை, கச்சேரி ரோடு உள்ளிட்ட பகுதிகளில் பகல், இரவு நேரங்களில் போக்குவரத்திற்கு இடையூறாக ஏராளமான ஆடு, மாடு, நாய் உள்ளிட்ட கால்நடைகள் சுற்றித்திரிகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் கடும் இன்னலுக்கு உள்ளாகி வருகின்றன.

மேலும் பள்ளி நேரங்களில் நடந்து செல்லும் மாணவர்களை மாடுகள் முட்டி விடுகின்றன. இந்த நிலையில் பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றி திரியும் கால்நடைகளை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும்.

துர்நாற்றம்

கால்நடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதுகுறித்து வர்த்தகர்கள் கூறுகையில், சீர்காழி நகர் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட கால்நடைகள் இரவு,பகலாக சுற்றித்திரிகின்றன. இந்த கால்நடைகளை உரிமையாளர்கள் முறையாக பராமரிப்பது கிடையாது. மாறாக கால்நடைகள் இரவு நேரங்களில் கடைகளின் முன்பு படுத்து சாணத்தை போட்டு விட்டு செல்கிறது.. இந்த சாணம் கடுமையாக துர்நாற்றம் வீசுகிறது. இதனால் சாலையில் செல்பவர்களும், கடைக்கு வருபவர்களும் முகம் சுழிக்கும் நிலை ஏற்படுகிறது.

விபத்துகள்

மேலும் கால்நடைகளால் அடிக்கடி வாகன விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story