வடகிழக்கு பருவமழையால் ஏற்படும்மின்பாதிப்புகளை சரிசெய்ய 10 குழுக்கள் அமைப்பு:மேற்பார்வை பொறியாளர் தகவல்


வடகிழக்கு பருவமழையால் ஏற்படும்மின்பாதிப்புகளை சரிசெய்ய 10 குழுக்கள் அமைப்பு:மேற்பார்வை பொறியாளர் தகவல்
x
தினத்தந்தி 11 Oct 2023 12:15 AM IST (Updated: 11 Oct 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

வடகிழக்கு பருவமழையால் ஏற்படும் மின்பாதிப்புகளை சரி செய்ய 10 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் தெரிவித்தார்.

தேனி

10 குழுக்கள்

தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தால் பொதுமக்கள் நலன் கருதி, மின்தடை மற்றும் மின் விபத்துகளை தவிர்க்கும் பொருட்டு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் விதமாக அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.

இதுதொடர்பாக தேவையான தளவாட பொருட்கள் மற்றும் வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மேலும் பருவமழை காரணமாக எதிர்பாராத நிகழ்வுகளாக மின்தடை ஏற்பட்டாலோ, மரங்கள் மின்பாதையில் விழுந்து கிடந்தாலோ, மின்கம்பி அறுந்து விழுவது, மின்கம்பங்கள் சாய்வது போன்றவை நிகழ்ந்தால் மின் நுகர்வோர்கள் உடனடியாக தொடர்பு கொண்டு சரிசெய்வதற்காக தேனி மின்பகிர்மான வட்டத்தில் 10 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழுக்களில் மொத்தம் 300 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தகவல் கொடுக்கலாம்

எனவே, வடகிழக்கு பருவமழை காரணமாக ஏற்படும் அசம்பாவிதங்கள் குறித்து மின்வாரியத்துக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தால் உடனடியாக அங்கு இந்த குழுவினர் வந்து சீரமைப்பு பணிகளை மேற்கொள்வார்கள். மேலும், தேனி மின்பகிர்மான வட்ட அளவில் இந்த பணிகளுக்கான சிறப்பு அலுவல் அதிகாரியாக செயற்பொறியாளர் ரமேஷ்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். அவரிடமும் 9443384886 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு தகவல்களை கொடுக்கலாம்.

மேலும் பொதுமக்கள் 9498794987 என்ற செல்போன் எண் மற்றும் setheni@tnebnet.org என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் தங்களது தகவல்கள் மற்றும் புகார்களை தெரிவிக்கலாம். இந்த தகவலை தேனி மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் சகாயராஜ் தெரிவித்தார்.


Next Story