காவிரி விவகாரம்: பேரவையில் எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்பு தீர்மானம்


காவிரி விவகாரம்: பேரவையில் எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்பு தீர்மானம்
x
தினத்தந்தி 22 Feb 2024 6:41 AM GMT (Updated: 22 Feb 2024 6:48 AM GMT)

சட்டப் பேரவையில் பேச அனுமதி மறுக்கப்படுகிறது என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

சென்னை,

காவிரி விவகாரம் தொடர்பாக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

காவிரி நீர் பிரச்சனையில் காவிரி நடுவர் மன்ற பரிந்துரைகள் அமல்படுத்தப்பட்டதா? காவிரி ஆணைய கூட்டத்தில் தந்திரமாக மேகதாது விவகாரம் பேசப்பட்டுள்ளது. மேகதாது குறித்து பேசப்பட்ட காவிரி ஆணைய கூட்டத்தில் கலந்து கொண்டது ஏன்? மேகதாது விவகாரத்தில் சட்டமன்றத்தில் கண்டன தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

தமிழக அரசு அலட்சியமாக இருப்பதால், கர்நாடக அரசு நினைப்பது போல் மேகதாதுவில் அணைகட்டி விடும். மேகதாது விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டில் தடை ஆணை பெற வேண்டும். சட்டப் பேரவையில் பேச அனுமதி மறுக்கப்படுகிறது. சபாநாயகர் பேச விடுவதே இல்லை" என்று கூறினார்.

இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானம் மீது அமைச்சர் துரைமுருகன் பதிலளித்து வருகிறார்.


Next Story