தமிழகம் முழுவதும் உள்ள பேருந்துகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும் - அமைச்சர் சிவசங்கரன்
சென்னையில் புதிதாக 500 மின்சார பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்து உள்ளார்.
சென்னை,
போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
சென்னை மாநகரில் புதிதாக 500 மின்சார பேருந்துகளை வாங்கி இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில் முதற்கட்டமாக 100 பேருந்துகள் விரைவில் வரவுள்ளது. சோதனை முறையில் மின்சார பேருந்துகள் விரைவில் இயக்கப்பட உள்ளது. இந்த முறை வெற்றியடைந்த பின் தமிழகம் முழுவதும் இயக்குவதற்காக மின்சார பேருந்துகள் புதிதாக வாங்கப்படும்.
பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு முதற்கட்டமாக சென்னையில் இயக்கப்பட்டு வரும் பேருந்துகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகிறது. அது முழுமையாக நிறைவு பெற்ற பிறகு தமிழகம் முழுவதும் உள்ள பேருந்துகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story