பாதுகாப்பு என்ற பெயரில் சி.சி.டி.வி. வைத்து அண்டை வீட்டு விவகாரங்களில் தலையிடக் கூடாது - கேரள ஐகோர்ட்டு எச்சரிக்கை


பாதுகாப்பு என்ற பெயரில் சி.சி.டி.வி. வைத்து அண்டை வீட்டு விவகாரங்களில் தலையிடக் கூடாது - கேரள ஐகோர்ட்டு எச்சரிக்கை
x

சி.சி.டி.வி. கேமரா பொருத்துவது தொடர்பாக விதிமுறைகள் அவசியம் என கேரள ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் எர்ணாகுளத்தைச் சேர்ந்த அக்னஸ் மிக்கேல் என்பவர், தனது வீட்டை நோக்கி அண்டை வீட்டு நபர் சி.சி.டி.வி. கேமராவை பொருத்தியுள்ளதாகவும், இது தொடர்பாக நடவடிக்கை உத்தரவிடக் கோரியும் கேரள ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதி வி.ஜி.அருண் முன்பு விசாரணைக்கு வந்த போது, பாதுகாப்பு என்ற பெயரில் அண்டை வீட்டை நோக்கி சி.சி.டி.வி. கேமராவை வைத்து அவர்களது விவகாரங்களில் தலையிடக் கூடாது என எச்சரித்தார்.

மேலும் சி.சி.டி.வி. பொருத்துவது தொடர்பாக விதிமுறைகள் அவசியம் எனவும், இது குறித்து மாநில அரசு உரிய கட்டுப்பாடுகளை கொண்டு வர வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.


Next Story