குறுவட்ட அளவிலான தடகள போட்டி
குறுவட்ட அளவிலான தடகள போட்டி நடந்தது.
திருச்சி
மணிகண்டம் ஒன்றியம் சார்பில் குறுவட்ட அளவிலான தடகள போட்டி திருச்சி அண்ணா ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது. இதில் 20 பள்ளிகளை சேர்ந்த 345 மாணவர்களும், 276 மாணவிகளும் பங்கேற்றனர். நேற்று 100 மீட்டர் ஓட்டம், 3000 மீட்டர், தொடர் ஓட்டம், நீளம் தாண்டுதல் என பல்வேறு போட்டிகள் நடந்தன. முன்னதாக நடந்த தொடக்க நிகழ்ச்சிக்கு மாவட்ட கல்வி அலுவலர் சங்கரநாராயணன் தலைமை தாங்கியதுடன், போட்டிகளை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் சரோஜினி, சோமரசம்போட்டை செயிண்ட் ஜோசப் பள்ளி தலைமை ஆசிரியர் சுதா, உடற்கல்வி ஆசிரியர் ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர். இன்று (வெள்ளிக்கிழமை) 2-வது மற்றும் கடைசி நாள் போட்டிகள் நடக்கின்றன.
Related Tags :
Next Story