தொழிலாளியிடம் செல்போன் பறிப்பு


தொழிலாளியிடம் செல்போன் பறிப்பு
x

தொழிலாளியிடம் செல்போன் பறிக்கப்பட்டுள்ளது.

கரூர்

நாமக்கல் மாவட்டம், மோகனூர் அருகே உள்ள வடுகர் தெருவை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 47). தொழிலாளியான இவர், கரூர் மாரியம்மன் கோவில் அருகே உள்ள பஸ் நிறுத்தம் பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மர்மநபர்கள் சதீஷ்குமார் வைத்திருந்த செல்போனை பறித்து சென்று விட்டனர். இதுகுறித்து சதீஷ்குமார் கொடுத்த புகாரின்பேரில், கரூர் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அப்துல்லா வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story