கொசப்பட்டி ஊராட்சியில் முட்புதரில் வீசப்பட்ட அரசு சிமெண்டு மூட்டைகள்


கொசப்பட்டி ஊராட்சியில்  முட்புதரில் வீசப்பட்ட அரசு சிமெண்டு மூட்டைகள்
x
தினத்தந்தி 1 Oct 2022 6:45 PM GMT (Updated: 1 Oct 2022 6:45 PM GMT)

கொசப்பட்டி ஊராட்சியில் முட்புதரில் வீசப்பட்ட அரசு சிமெண்டு மூட்டைகள்

தர்மபுரி

மொரப்பூர்:

மொரப்பூர் ஊராட்சி ஒன்றியம் கொசப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட வேங்கியாம்பட்டி பகுதியில் தனியாருக்கு சொந்தமான தரிசு நிலங்கள் உள்ளன. இந்த நிலங்களில் முட்புதர்கள் நிறைந்த பகுதியில் அரசு பணிகளுக்கு பயன்படுத்தப்படும் சுமார் 70-க்கும் மேற்பட்ட அரசு சிமெண்டு மூட்டைகள் வீசப்பட்டு கேட்பாரற்று கிடந்தது. இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். மேலும் சிமெண்டு மூட்டைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்றும், அரசு பணிகளுக்கு முறையாக சிமெண்டு மூட்டைகள் பயன்படுத்தாமல் வீணாவதை தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் தெரிவித்தனர். மேலும் சிமெண்டு மூட்டைகளை முட்புதரில் வீசிய நபர்கள் மீது மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.


Next Story