வடகாடு பகுதியில் சென்டி பூக்கள் கிலோ ரூ.10-க்கு விற்பனை


வடகாடு பகுதியில் சென்டி பூக்கள் கிலோ ரூ.10-க்கு விற்பனை
x

வடகாடு பகுதியில் சென்டி பூக்கள் கிலோ ரூ.10-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்.

புதுக்கோட்டை

வடகாடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் சென்டி பூக்களை அதிகளவில் சாகுபடி செய்து வருகிறார்கள். தற்போது விளைச்சல் அதிகரித்துள்ளதால் வடகாடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பூக்கடைகளில் கிலோ ரூ.10-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒருசில கடைகளில் கேட்பாரின்றி சென்டி பூக்கள் குவிந்து கிடக்கிறது. கடைசியில் அவை குப்பைக்கு செல்கிறது. இதனால் போதிய விலை கிடைக்காமல் விவசாயிகள் வேதனை அடைந்து வருகின்றனர்.


Next Story