மத்திய அரசின் பட்ஜெட் நகல் எரிப்பு போராட்டம்
திருவாரூரில் மத்திய அரசின் பட்ஜெட் நகல் எாிப்பு போராட்டம் நடந்தது.
திருவாரூரில் மத்திய அரசின் பட்ஜெட் நகல் எாிப்பு போராட்டம் நடந்தது.
பட்ஜெட் நகல் எரிப்பு
திருவாரூர் ரெயில் நிலையம் எதிரில் நேற்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் மத்திய பா.ஜ.க அரசின் பட்ஜெட் நகல் எரிப்பு போராட்டம் நடைபெற்றது. போராட்டத்துக்கு அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்க மாநில செயலாளர் எஸ்.சங்கர் தலைமை தாங்கினார்.
கோஷம் எழுப்பினர்
சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மத்திய பட்ஜெட்டை கண்டித்தும், விவசாய தொழிலாளர்களுக்கு தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தில் நிதி குறைப்பு மற்றும் உணவு மானியத்தை குறைத்ததை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.
போராட்டத்தில் விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் சேகர், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் கந்தசாமி, விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் தம்புசாமி, விவசாயிகள் சங்க மாவட்ட பொருளாளர் கலியபெருமாள், ் மற்றும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.