வளர்ச்சிப் பணிகளை மத்திய அரசு அதிகாரிகள் பார்வையிட்டனர்


வளர்ச்சிப் பணிகளை மத்திய அரசு அதிகாரிகள் பார்வையிட்டனர்
x

வாணியம்பாடி நகராட்சியில் வளர்ச்சிப் பணிகளை மத்திய அரசு அதிகாரிகள் பார்வையிட்டனர்.

திருப்பத்தூர்

வாணியம்பாடி நகராட்சி பகுதியில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளை மத்திய அரசு அதிகாரிகள் பார்வையிட்டனர்.

காலை உணவு திட்டம்

வாணியம்பாடி நியூடவுனில் உள்ள நகராட்சி தொடக்கப் பள்ளியில் நேற்று காலை முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு உணவு வழங்கப்படுவதை டெல்லியில் இருந்து வந்த மத்திய அரசு அதிகாரிகள் 8 பேர் மற்றும் கலெக்டர் அமர்குஷ்வாஹா பரிசோதனை செய்து பார்த்தனர்.

தொடர்ந்து அங்குள்ள சமையல் கூடத்திற்கு சென்று உணவு தரமாக தயாரிக்கப்படுகிறதா என்றும் ஆய்வு செய்தனர். பின்னர் அவர்கள் மாணவர்களுடன் அமர்ந்து உணவின் தரம் குறித்து சாப்பிட்டு பார்த்தனர்.

உழவர் சந்தை

அதைத்தொடர்ந்து வாணியம்பாடி நகராட்சி அலுவலகம் அருகில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் நிழற்கூடத்தை பார்வையிட்டனர். மேலும் நகராட்சி பகுதியில் உள்ள உழவர் சந்தையை ஆய்வு செய்தனர்.

அப்போது அந்தப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குப்பை கிடங்கிற்கு சென்று அங்கு குப்பைகள் எவ்வாறு தரம் பிரிக்கப்படுகிறது என்பது குறித்தும், உழவர் சந்தையில் விவசாயிகள் காய்கறிகளை விற்பனை செய்வது குறித்தும் மத்திய அரசு அதிகாரிகளுக்கு, கலெக்டர் விளக்கம் அளித்தார். இந்த ஆய்வுகளின் போது நகராட்சி ஆணையாளர் மாரிச்செல்வி, என்ஜினீயர் சங்கர் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.


Next Story