ராணுவ எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்ற இளைஞர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு


ராணுவ எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்ற இளைஞர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு
x

ராணுவ எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்ற இளைஞர்களுக்கு உடற்தகுதி தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் முடிந்தன.

அரியலூர்

மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்தின் மூலம் இந்திய ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு முகாமிற்கு விண்ணப்பித்த பெரம்பலூர், அரியலூர், திருச்சி, கரூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மயிலாடுதுறை, காரைக்கால் ஆகிய 16 மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்களுக்கான எழுத்து தேர்வு ஏற்கனவே நடந்தது. முதற்கட்ட எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்ற 3 ஆயிரத்து 600 பேருக்கு உடற்தகுதி தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் பெரம்பலூரில் மாவட்ட எம்.ஜி.ஆர். விளையாட்டு மைதானத்தில் கடந்த 1-ந்தேதி தொடங்கி நேற்று வரை நடந்தது.

முதல் நாளில் 727 பேரும், 2-வது நாளில் 785 பேரும், 3-வது நாளில் 720 பேரும், 4-வது நாளில் 617 பேரும் என 2 ஆயிரத்து 849 பேர் பங்கேற்றனர். இதில் நேற்று முன்தினம் சான்றிதழ் சரிபார்ப்பு பணிகளில் விடுபட்டவர்களுக்கு நேற்று சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நடந்தது. கடந்த 5 நாட்களாக நடைபெற்று வந்த மேற்கண்ட பணிகள் நேற்றுடன் முடிவடைந்தன.


Next Story