தமிழகத்தின் 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
தமிழகத்தின் 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை,
தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழக பகுதியின் மேல் அடுக்கில் நிலவக்கூடிய காற்றின் திசைவேக மாறுபாடு காரணமாக நேற்று தமிழகத்தில் ஒருசில பகுதிகள் மிதமான மழை பெய்தது.
இந்த நிலையில், தமிழகத்தில் குறிப்பாக நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, குமரி, தென்காசி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story