தமிழகத்தில் இன்று 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும்
சென்னை,
தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாடு ,புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வரும் 16ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தர்மபுரி,சேலம் ,நாமக்கல் ,பெரம்பலூர் ,கள்ளக்குறிச்சி ,தி.மலை ,திருப்பத்தூர் ,ஈரோடு ,நீலகிரி ,கோவை ,திருப்பூர் ,திண்டுக்கல் ,தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது .
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் .நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான ,மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story