தமிழகத்தின் 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
சென்னை,
இலங்கை மற்றும் அதனை ஒட்டிய குமரி கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகின்றது. இதனால் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகின்றது.
இந்த நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று மற்றும் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் இன்று தமிழகத்தின் 16 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய 16 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து உள்ளது.
மேலும் சென்னையை பொறுத்த வரையில் அடுத்த 48 மணி நேரத்தில் நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.