தமிழகத்தில் நீலகிரி மற்றும் கோவையில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு


தமிழகத்தில் நீலகிரி மற்றும் கோவையில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
x

தமிழகத்தில் நீலகிரி மற்றும் கோவையில் இன்று கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னை,

மேற்கு திசை காற்று வேக மாறுபாடு காரணமாக இன்றைய தினம் தமிழகத்தில் நீலகிரி மற்றும் கோவையில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக நாளையும், நாளை மறுநாளும் தமிழகம், புதுவையில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தி.மலை, ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை மையம் முன்னதாக தெரிவித்திருந்தது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் கானப்படும் என்றும், நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடுன் என்றும், தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story