4 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு!
தமிழகத்தின் தென் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழை பெய்துவருகிறது.
சென்னை,
அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதன் காரணமாக தென் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழை பெய்துவருகிறது. அத்துடன், வருகிற 5-ந்தேதி வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில், தமிழகத்தின் 4 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. அதன்படி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்யுமென வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story