தமிழகத்தில் இன்று 23 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் தகவல்


தமிழகத்தில் இன்று 23 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் தகவல்
x
தினத்தந்தி 3 Nov 2023 6:32 AM IST (Updated: 3 Nov 2023 6:35 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 23 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை,

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக இடி, மின்னலுடன் கூடிய கனமழையும், ஒரு சில பகுதிகளில் மிதமான மழையும் பெய்து வருகிறது. இந்நிலையில் இன்றைய தினம் தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 23 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி திருவள்ளூர், ராணிப்பேட்டை, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாருர், தஞ்சை, புதுக்கோட்டை, திருச்சி, ராமநாதபுரம், தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, குமரி, ஈரோடு, திருப்பூர், நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


Next Story