தமிழகத்தில் 28 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு


தமிழகத்தில் 28 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு
x
தினத்தந்தி 24 July 2023 5:44 PM IST (Updated: 24 July 2023 5:45 PM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் 28 மாவட்டங்களுக்கு அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னை,

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்துவருகிறது.

இந்த நிலையில், தமிழகத்தில் 28 மாவட்டங்களுக்கு அடுத்த 3 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அதாவது, கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி, ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், அரியலூர், நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை சென்னை, காஞ்சி, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவள்ளூர் ஆகிய 28 மாவட்டங்களில் மிதாமன மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.


Next Story