தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்பு


தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்பு
x

தமிழ்நாட்டில் உள்ள ஆறு மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.

சென்னை,

வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக டெல்டா, தென் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மழை அதிகம் பெய்யும் மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தமிழ்நாட்டில் உள்ள ஆறு மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.

அதாவது சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், குமரி, நெல்லை ஆகிய 6 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.


Next Story