தமிழகத்தின் 6 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு
தென் தமிழக பகுதிகளில் மிதமான மழை பெய்துவருகிறது.
சென்னை,
தமிழகத்தில் கோடை வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பகல் நேரத்தில் மக்கள் வெளியே வர முடியாத அளவுக்கு வெப்ப அலை வீசுகிறது. எனினும், சில இடங்களில் மிதமான மழை பெய்து வெப்பத்தை சற்று தணித்து வருகிறது. தென் தமிழக பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில், தமிழகத்தின் 6 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. அதன்படி, மதுரை, தஞ்சாவூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story