சென்னையில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்
சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் அடுத்த 3 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை
தமிழக கடலோரப் பகுதிகளின்மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்குசுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் அக்.19 (இன்று) முதல் 22 வரை 4 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு சுற்றியுள்ள பகுதியில் அடுத்த 3 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story