தமிழகத்தின் 10 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு


தமிழகத்தின் 10 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு
x

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தென் தமிழகத்தில் பரவலாக மழை பெய்துவருகிறது.

சென்னை,

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று (09.01.2024) தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், குமரி, நெல்லை, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வுமையம் முன்னதாக தெரிவித்து இருந்தது.

இந்த நிலையில், தமிழகத்தின் 10 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. அதன்படி, குமரி, நெல்லை, தென்காசி, தேனி, கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல் மற்றும் கரூர் ஆகிய 10 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வுமையம் தகவல் தெரிவித்துள்ளது.


Next Story