தமிழகத்தின் 11 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு.!
தமிழகத்தின் 11 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
சென்னை,
தமிழ்நாடு மற்றும் கேரளாவில் வடகிழக்கு பருவமழை இன்றே தொடங்கியுள்ளது என்றும், இதனால் தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மைய தென்மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் இன்று தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில், தமிழகத்தின் 11 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
அதாவது, தமிழ்நாட்டில் புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சிராப்பள்ளி, கரூர், நாமக்கல், சேலம், அரியலூர், பெரம்பலூர் மற்றும் கடலூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக தென் மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story