தமிழகத்தின் 11 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு.!
தமிழகத்தின் 11 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
சென்னை,
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 4 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று வானிலை மையம் முன்னதாக தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில், தமிழகத்தின் 11 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வுமையம் தகவல் தெரிவித்து உள்ளது.
அதாவது, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, சிவகங்கை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம் மற்றும் புதுக்கோட்டை ஆகிய 11 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வுமையம் தகவல் தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story