தமிழகத்தின் 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தின் ஒருசில இடங்களில் கனமழையும், ஓரிரு இடங்களில் மிதமான மழையும் பெய்து வருகிறது.
சென்னை,
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை கடந்த 3 தினங்களாக தீவிரம் அடைந்திருக்கிறது. ஒருசில இடங்களில் கனமழையும், ஓரிரு இடங்களில் மிதமான மழையும் பெய்து வருகிறது. இன்று நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் ஓரிரு இடங்களிலும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில், தமிழகத்தின் 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், நாகை, ராமநாதபுரம் மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story