தமிழகம், புதுவையில் ஏப்.10ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு


தமிழகம், புதுவையில் ஏப்.10ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு
x
தினத்தந்தி 6 April 2023 1:24 PM IST (Updated: 6 April 2023 2:04 PM IST)
t-max-icont-min-icon

லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

சென்னை,

தமிழ்நாட்டில் இன்று முதல் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது.

இதன் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் இன்று, நாளை, மற்றும் நாளை மறுநாள் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யும் என்றும், ஏப்ரல் 9-ம் தேதி தமிழ்நாடு மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.


Next Story