தமிழகம், புதுவையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு


தமிழகம், புதுவையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு
x

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்துக்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும்.

சென்னை,

தமிழகத்தில் 5 நாட்கள் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்றும், நாளையும் தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதியில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் லேசான மழை பெய்யக்கூடும். 17-ந்தேதி தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும். 18, 19-ந்தேதிகளில் தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்துக்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் லேசான மழை பெய்யக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் லேசான மழை பெய்யும்.

கடந்த 24 மணி நேரத்தில் கோவில்பட்டி, ஊட்டியில் தலா 5 செ.மீ. மழை அதிகபட்சமாக பெய்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story