தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு.!


தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு.!
x
தினத்தந்தி 22 Oct 2023 3:22 PM IST (Updated: 22 Oct 2023 4:10 PM IST)
t-max-icont-min-icon

தமிழகம், புதுவை மற்றும் காரைக்காலில் வருகிற 28-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

சென்னை,

தமிழ்நாட்டிற்கு ஆண்டு தோறும் அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை வடகிழக்கு பருவமழை காலம் ஆகும். இந்த பருவமழையின் மூலமே தமிழ்நாடு அதிக அளவில் மழையை பெறும். இந்த சூழலில், தென் மேற்கு பருவமழை முற்றிலுமாக முடிவடைந்து வடகிழக்கு பருவமழை தொடங்கியதாக நேற்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.

இதற்கிடையில், வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி, காற்றழுத்தத் தாழ்வுமண்டலமாக வலுப்பெறுகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வுமையம் அறிவித்துள்ளது.

வருகிற 28-ம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்காலில் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.


Next Story