தமிழகத்தில் 10 மாவட்டங்களில் அதிகாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்பு


தமிழகத்தில் 10 மாவட்டங்களில் அதிகாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்பு
x

கோப்புப்படம்

திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

சென்னையை மிக்ஜம் புயல் அடித்து துவம்சம் செய்து இருக்கிறது. இரவு முழுக்க பெய்த கனமழை, தீவிர காற்று காரணமாக சென்னையே நிலைகுலைந்து போய் உள்ளது. நேற்று சென்னையில் தொய்வின்றி பெய்த மழையால் பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியே வரமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர். இதனால், சென்னையின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியது.

இந்த சூழலில் சென்னையில் இருந்து 130 கி.மீ. வடக்கு திசையில் விலகி மிக்ஜம் புயல் சென்றுள்ளது என்றும் இன்று காலை தெற்கு ஆந்திர பகுதியை அடைந்து, காலை 5.30 மணி முதல் 11.30 மணிக்குள் நெல்லூர்-காவாலி இடையே தீவிர புயலாக கடக்கக்கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தெற்கு ஆந்திர பகுதியையொட்டி நெல்லூர்-மசூலிப்பட்டினத்துக்கு இடையே கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது நெல்லூர்-காவாலி இடையே கரையை கடக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தமிழகத்தில் 10 மாவட்டங்களில் அதிகாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய 6 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story