சென்னை சென்டிரல்-மதுரை ரெயில் சேவையில் மாற்றம் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு


சென்னை சென்டிரல்-மதுரை ரெயில் சேவையில் மாற்றம் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
x

சென்னை சென்டிரல்-மதுரை ரெயில் சேவையில் மாற்றம் செய்துள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

பராமரிப்பு பணிகள் காரணமாக கீழ்க்கண்ட ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

*சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல்-மதுரை(வண்டி எண்: 20601) இடையே இரவு 10.30 மணிக்கு புறப்படும் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் திண்டுக்கல் மற்றும் மதுரை இடையே நாளை பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

*மதுரை-எம்.ஜி.ஆர். சென்டிரல்(20602) இடையே இரவு 10.50 மணிக்கு புறப்படும் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் மதுரை மற்றும் திண்டுக்கல் இடையே நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story