திருநெல்வேலி-திருவனந்தபுரம் இடையே எக்ஸ்பிரஸ் ரெயில் சேவைகளில் மாற்றம் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு


திருநெல்வேலி-திருவனந்தபுரம் இடையே எக்ஸ்பிரஸ் ரெயில் சேவைகளில் மாற்றம் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
x

திருநெல்வேலி-நாகர்கோவில், நாகர்கோவில்-திருவனந்தபுரம் இடையே பராமரிப்பு பணிகள் காரணமாக கீழ்கண்ட எக்ஸ்பிரஸ் ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை:

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

திருநெல்வேலி-நாகர்கோவில், நாகர்கோவில்-திருவனந்தபுரம் இடையே பராமரிப்பு பணிகள் காரணமாக கீழ்கண்ட எக்ஸ்பிரஸ் ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

முழுவதுமாக ரத்து செய்யப்படும் ரெயில்கள்

  • நாகர்கோவில்-திருநெல்வேலி(வண்டி எண்:06641) இடையே மாலை 6.40 மணிக்கு புறப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 25-ந்தேதி முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.
  • திருநெல்வேலி-தூத்துக்குடி(06668) இடையே காலை 7.35 மணிக்கு புறப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 25-ந்தேதி முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.
  • தூத்துக்குடி-திருநெல்வேலி(06667) இடையே மாலை 6 மணிக்கு புறப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 25-ந்தேதி முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.
  • திருநெல்வேலி-நாகர்கோவில்(06642) இடையே காலை 6.35 மணிக்கு புறப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 25-ந்தேதி முழுவதுமாக ரத்துசெய்யப்படுகிறது.

பகுதியாக ரத்து செய்யப்படும் ரெயில்கள்

  • தாம்பரம்-நாகர்கோவில்(வண்டி எண்: 20691) இடையே இரவு 11 மணிக்கு புறப்படும் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 19-ந்தேதி முதல் 27-ந்தேதி வரை திருநெல்வேலி-நாகர்கோவில் இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டுகிறது. தாம்பரத்தில் இருந்து திருநெல்வேலி வரை மட்டுமே இயக்கப்படும்.
  • நாகர்கோவில்-தாம்பரம்(20692) இடையே மதியம் 3.50 மணிக்கு புறப்படும் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 20-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை நாகர்கோவில்-திருநெல்வேலி இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டுகிறது. திருநெல்வேலியில் இருந்து மாலை 5.05 மணிக்கு தாம்பரம் நோக்கி புறப்பட்டு செல்லும்.
  • திருச்சி-திருவனந்தபுரம்(22627) இடையே காலை 7.20 மணிக்கு புறப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 20-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை திருநெல்வேலி-திருவனந்தபுரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது. திருச்சியில் இருந்து திருநெல்வேலி வரை மட்டுமே இயக்கப்படும்.
  • திருவனந்தப்புரம்-திருச்சி(22628) இடையே காலை 11.35 மணிக்கு திருவனந்தப்புரத்திலிருந்து புறப்படும் அதிவிரைவு ரெயில் வருகிற 20-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை திருவனந்தப்புரம்-திருநெல்வேலி இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டுகிறது. திருநெல்வேலியில் இருந்து மதியம் 2.30 மணிக்கு திருச்சி புறப்பட்டு செல்லும்.
  • சென்னை சென்டிரல்-நாகர்கோவில்(12689) இடையே இரவு 7 மணிக்கு புறப்படும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 23-ந்தேதி திருநெல்வேலி-நாகர்கோவில் இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டுகிறது. திருநெல்வேலி வரை மட்டுமே இயக்கப்படும்.
  • நாகர்கோவில்- சென்னை சென்டிரல்(12690) இடையே இரவு 7.30 மணிக்கு புறப்படும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 25-ந்தேதி நாகர்கோவில்-திருநெல்வேலி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. திருநெல்வேலியில் இருந்து இரவு 9.30 மணிக்கு சென்னை சென்டிரல் நோக்கி புறப்பட்டு செல்லும்.
  • புதுச்சேரி-கன்னியாகுமரி(16861) இடையே மதியம் 12 மணிக்கு புறப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 25-ந்தேதி திருநெல்வேலி-கன்னியாகுமரி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. திருநெல்வேலி வரை மட்டுமே இயக்கப்படும்.
  • கன்னியாகுமரி-புதுச்சேரி(16862) இடையே மதியம் 1.50 மணிக்கு புறப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 26-ந்தேதி கன்னியாகுமரி-திருநெல்வேலி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. திருநெல்வேலியில் இருந்து மதியம் 3.40 மணிக்கு புதுச்சேரி நோக்கி புறப்பட்டு செல்லும்.

இவ்வாறு தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.


Next Story