இன்றும், நாளையும் ரெயில் போக்குவரத்தில் மாற்றம்


இன்றும், நாளையும் ரெயில் போக்குவரத்தில் மாற்றம்
x
தினத்தந்தி 3 Oct 2023 7:16 AM IST (Updated: 3 Oct 2023 11:16 AM IST)
t-max-icont-min-icon

இரட்டை ரெயில் பாதைப்பணி காரணமாக நெல்லையில் இன்றும், நாளையும் ரெயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

நெல்லை,

விருதுநகர் மற்றும் நெல்லை ரெயில் நிலையங்களில் இரட்டை ரெயில் பாதையில் ரெயில் போக்குவரத்து நடைபெற்று வருகிறது. விருதுநகர், நெல்லை ரெயில் நிலையங்களுக்கு இடையேயான போக்குவரத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக ரெயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

அதன்படி இன்று (செவ்வாய்க்கிழமை), நாளை (புதன்கிழமை) ஆகிய நாட்களில் பாலக்காடு - திருச்செந்தூர் ரெயில் (16731) மற்றும் திருச்செந்தூர் - பாலக்காடு ரெயில் (16732) ஆகியவை கோவில்பட்டி - திருச்செந்தூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

* செங்கோட்டை - நெல்லை சிறப்பு ரெயில் (06684) மற்றும் நெல்லை- செங்கோட்டைச் சிறப்பு ரெயில் (06687) ஆகியவை சேரன்மாதேவி - நெல்லை இடையே இன்றும், நாளையும் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

* திருவனந்தபுரம் - திருச்சி இன்டர்சிட்டி ரெயில் (22628), திருவனந்தபுரத்திலிருந்து 40 நிமிடங்கள் தாமதமாக மதியம் 12.15 மணிக்கு புறப்படும். இந்த தகவல் தெற்கு ரெயில்வே அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story