மயிலாடுதுறை-விழுப்புரம் இடையே ரெயில் சேவையில் மாற்றம்: தெற்கு ரெயில்வே அறிவிப்பு


மயிலாடுதுறை-விழுப்புரம் இடையே ரெயில் சேவையில் மாற்றம்: தெற்கு ரெயில்வே அறிவிப்பு
x

கோப்புப்படம்

மயிலாடுதுறை-விழுப்புரம் இடையே ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

சென்னை,

திருச்சி கோட்டம் சீர்காழி ரெயில் நிலையம்-வைத்தீசுவரன் கோவில் ரெயில் நிலையம் இடையே நடைபெற்றுவரும் பராமரிப்பு பணி காரணமாக கீழ்க்கண்ட ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

* மயிலாடுதுறை-விழுப்புரம் (வண்டி எண்: 06692) இடையே மதியம் 3.45 மணிக்கு புறப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று (செவ்வாய்க்கிழமை) மற்றும் வருகிற 21, 25, 28-ந்தேதிகளில் மயிலாடுதுறை மற்றும் சிதம்பரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரெயில் சிதம்பரத்தில் இருந்து மாலை 4.34 மணிக்கு இயக்கப்படும்.

* மயிலாடுதுறை-திருவாரூர் (06695) இடையே மாலை 6.15 மணிக்கு புறப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று (செவ்வாய்க்கிழமை) மற்றும் வருகிற 21, 25, 28-ந்தேதிகளில் மயிலாடுதுறையில் இருந்து மாலை 6.50 மணிக்கு 35 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story