தொழில்துறையின் பெயர் மாற்றம் - தமிழக அரசு உத்தரவு


தொழில்துறையின் பெயர் மாற்றம்  -  தமிழக அரசு உத்தரவு
x

தொழில்துறையின் பெயரை மாற்றி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

சென்னை,

தமிழக மனிதவள மேலாண்மை துறையின் செயலாளர் மைதிலி கே.ராஜேந்திரன் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டிருப்பதாவது:-

தொழில் துறை என்று அழைக்கப்பட்டு வந்த அரசுத் துறை இனி தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தக துறை என்று அழைக்கப்படும். அதற்கு ஏற்ற வகையில், அரசு விதிகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தற்போது, தொழில் துறை அமைச்சராக தங்கம் தென்னரசு இருந்து வருகிறார். இனி அவர், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு, வர்த்தகம், தமிழ் ஆட்சி மொழி, தமிழ் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் என்று அழைக்கப்படுவார்.

1 More update

Next Story