திருத்தணி முருகன் கோவிலில் அறநிலைத்துறை ஆணையர் திடீர் ஆய்வு


திருத்தணி முருகன் கோவிலில் அறநிலைத்துறை ஆணையர் திடீர் ஆய்வு
x

திருத்தணி முருகன் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் முரளீதரன் திடீர் ஆய்வு செய்தார்.

திருவள்ளூர்

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 5-ம் படைவீடாக போற்றப்படுவது திருத்தணி முருகன் கோவில். இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, பாண்டிச்சேரி என பல்வேறு மாநிலங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்ய வருகின்றனர். இவ்வாறு வரும் பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் முரளீதரன் திருத்தணி முருகன் கோவிலில் திடீர் வருகை தந்து மேற்கொண்டு அன்னதானக் கூடத்தில் பக்தர்களுக்கு சுகாதாரமான முறையில் உணவு வழங்கப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது கோவில் சூப்பிரண்டு வித்யாசாகர் மற்றும் கோவில் அலுவலர்கள் உடனிருந்தனர்.


Next Story