சென்னையில் ஒரே நாளில் ரூ.15½ லட்சம் வசூல்; 2,500 வாகன ஓட்டிகள் மீது வழக்கு


சென்னையில் ஒரே நாளில் ரூ.15½ லட்சம் வசூல்; 2,500 வாகன ஓட்டிகள் மீது வழக்கு
x

சென்னையில் வாகன ஓட்டிகள் மீது புதிய அபராத சட்டத்தின்படி தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஒரே நாளில் 2,500 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ.15½ லட்சம் வசூலிக்கப்பட்டு உள்ளது.

சென்னை

புதிய சட்டம் தீவிர அமல்

மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய சட்ட திருத்தத்தின்படி விதி முறைகளை மீறி வாகனம் ஓட்டுபவர்களிடம் அபராத தொகை பல மடங்கு அதிகமாக வசூலிக்கப்படுகிறது. இந்த புதிய அபராத நடைமுறை நேற்று முன்தினம் முதல் அமலுக்கு வந்தது.

நேற்று புதிய அபராத வசூல் வேட்டை மிக தீவிரமாக நடந்தது. பல இடங்களில் வாகன ஓட்டிகள் போக்குவரத்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அபராத தொகையை போலீசார் தங்கள் கைகளில் பணமாக வாங்கக்கூடாது. அவர்கள் அபராத தொகைக்கான சலானை கொடுப்பார்கள். வாகன ஓட்டிகள் கையில் ஏ.டி.எம். கார்டு வைத்திருந்தால், உடனடியாக அபராத தொகை ஏ.டி.எம். கார்டு வாயிலாக வசூலிக்கப்பட்டுவிடும். இதுபோல் ஆன்லைன் மூலம் அபராத தொகை செலுத்த முடியாதவர்களிடம், அபராத தொகையை குறிப்பிட்டு சலானை கையில் கொடுத்துவிடுவார்கள். அதன்பிறகு வாகன ஓட்டிகளுக்கு அபராத தொகையை கட்டும்படி நோட்டீஸ் அனுப்புவார்கள்.

ஒரே நாளில் ரூ.15½ லட்சம்

போதையில் வாகனம் ஓட்டினால் ரூ.10 ஆயிரம் கோர்ட்டு மூலம் கட்ட வேண்டும். போதையில் வாகனம் ஓட்டுபவர்களோடு, தெரிந்தே வாகனத்தில் பயணிப்பவர்களும் ரூ.10 ஆயிரம் கட்ட வேண்டும். இதர குற்றம் புரிந்தவர்கள் தபால் அலுவலகம் போன்ற போலீசார் குறிப்பிட்டுள்ள இடத்தில் அபராத தொகையை செலுத்த வேண்டும்.

சென்னையில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 2,500 வழக்குகள் போடப்பட்டு, ரூ.15½ லட்சம் அபராத தொகை வசூலிக்கப்பட்டதாக போக்குவரத்து போலீசார் தெரிவித்தனர்.


Next Story