சென்னை- கோவை.. வந்தே பாரத்: 3 ஸ்டாப் தான்.. ஸ்பீடா போயிடலாம்... டிக்கெட் எவ்ளோ தெரியுமா..?


சென்னை- கோவை.. வந்தே பாரத்: 3 ஸ்டாப் தான்.. ஸ்பீடா போயிடலாம்... டிக்கெட் எவ்ளோ தெரியுமா..?
x

சென்னை-கோவை இடையே முதற்கட்டமாக 8 ஏசி பெட்டிகளுடன் வந்தே பாரத் ரெயில் ரெயில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

இந்திய தொழில்நுட்பத்தில் அதிநவீன வசதிகளுடன் தயாரிக்கப்பட்ட வந்தே பாரத் ரெயில் சேவை நாடு முழுவதும் தொடங்கப்பட்டு வருகிறது. சென்னை, பெங்களூரு, மைசூரு வழித்தடத்தை தொடர்ந்து சென்னை-கோவை வழித்தடத்திலும் இயக்கப்படுகிறது.

பிரதமர் மோடி தொடங்கிவைக்கும் இந்த வந்தேபாரத் ரெயில் சென்னையில் இருந்து பிற்பகல் 2.25 மணிக்கு புறப்பட்டு சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய 3 நிறுத்தத்தில் மட்டும் நின்று இறுதியாக கோவைக்கு இரவு 8.15 மணிக்கு வந்தடைகிறது.

சென்னை- கோவைக்கு சேர் கார் கட்டணம் 1,365 ரூபாயாகவும், எக்சிக்யூடிவ் இருக்கை கட்டணம் 2,485 ரூபாயாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மறுமார்க்கமாக அதிகாலை 6 மணிக்கு கோவையில் இருந்து புறப்படும் ரெயில், நண்பகல் 11.50 மணிக்கு சென்னையை வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவே உணவு சேவை இல்லாமல் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது கட்டணம் குறையும். அட்டவணைப்படி ரெயில் பயண தூரத்தை 5 மணி 50 நிமிடங்களில் கடக்கிறது.

சராசரியாக ரெயில் 110 கிலோமீட்டர் வேகத்தில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரெயில் புதன் கிழமை தவிர்த்து வாரத்தில் மற்ற ஆறு நாட்களும் இயக்கப்படுகிறது.

முதற்கட்டமாக 8 ஏசி பெட்டிகளுடன் ரெயில் இயக்கப்படும் எனவும், வரவேற்ப்பை பொறுத்து பெட்டிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் எனவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.




Next Story