சென்னை: நள்ளிரவில் கொட்டும் மழையில் மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் ஆய்வு


சென்னை: நள்ளிரவில் கொட்டும் மழையில் மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் ஆய்வு
x

சென்னையில் நேற்று மாலை முதல் தொடர் மழை பெய்து வருகிறது.

சென்னை,

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, சென்னையில் நேற்று மாலை முதல் தொடர் மழை பெய்து வருகிறது. நுங்கம்பாக்கம், கிண்டி, மீனம்பாக்கம், எழும்பூர், அடையாறு, சேப்பாக்கம், அம்பத்தூர் உள்பட பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

இதனிடையே, கனமழை பெய்துவரும் நிலையில் சாலைகள், தெருக்களில் மழைநீர் தேங்குவதை தடுக்க மாநகராட்சி பணியாளர்கள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், சென்னையில் நள்ளிரவு கொட்டும் மழையில் மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார். காமராஜர் சாலை, புளியந்தோப்பு உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்குவதை தடுக்க மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் பார்வையிட்டார். மழைநீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தினார்.


Next Story