சென்னை ஐகோர்ட்டு உத்தரவு எங்களுக்கு கிடைத்த வெற்றி - மனோஜ் பாண்டியன் பேட்டி


சென்னை ஐகோர்ட்டு உத்தரவு எங்களுக்கு கிடைத்த வெற்றி - மனோஜ் பாண்டியன் பேட்டி
x

சென்னை ஐகோர்ட்டு உத்தரவு எங்களுக்கு கிடைத்த வெற்றி என்று ஓ.பி.எஸ் ஆதரவாளர் மனோஜ் பாண்டியன் கூறினார்.

சென்னை,

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓ.பி.எஸ் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அவசர வழக்காக இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி குமரேஷ் பாபு, பொதுச்செயலாளர் தேர்தல் முடிவுகளை மார்ச் 24 வரை வெளியிட வேண்டாம் என்றும் தேர்தல் நடைமுறைகள் தொடரலாம் என நீதிபதி உத்தரவிட்டார்.

சென்னை ஐகோர்ட்டு உத்தரவை தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர். இதையடுத்து நீதிமன்ற வளாகத்தில் ஓ.பி.எஸ். தரப்பை சேர்ந்த மனோஜ் பாண்டியன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

"சென்னை ஐகோர்ட்டு உத்தரவு எங்களுக்கு கிடைத்த வெற்றி. நியாயம் தர்மம் எங்கள் பக்கம் உள்ளது., எங்கள் அடிப்படை உரிமை, எங்களை கட்சியில் இருந்து நீக்க எடப்பாடி பழனிசாமி யார்? கூவத்தூரில் இருந்த ஒரு கும்பல் எங்களை நீக்கினால், அந்த நீக்கம் செல்லுமா..?. குறுக்குவழியில் பொதுச்செயலாளர் ஆக 100 பேரை வைத்து திட்டமிட்டால் அதை நாங்கள் விடப்போவதில்லை. நீதி வெல்லும் வரை சட்டப்போராட்டம் தொடரும்" என்று கூறினார்.


Next Story