அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தலை எதிர்த்த வழக்கில் விரைவில் தீர்ப்பு


அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தலை எதிர்த்த வழக்கில் விரைவில் தீர்ப்பு
x

அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்தும், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தலை எதிர்த்தும் ஓ.பன்னீர்செல்வம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

சென்னை,

அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்தும், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தலை எதிர்த்தும் ஓ.பன்னீர்செல்வம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்குகளை நீதிபதி கே.குமரேஷ்பாபு கடந்த புதன்கிழமை விசாரித்தார். அப்போது, ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி என்று இருதரப்பிலும் மூத்த வக்கீல்கள் பலர் ஆஜராகி வாதிட்டனர்.

இதையடுத்து தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதி தள்ளிவைத்தார்.அப்போது, ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் எழுத்துப்பூர்வமான வாதம் தாக்கல் செய்ய அனுமதி கேட்டப்பட்டது. இதற்கு நீதிபதி அனுமதி வழங்கினார். இதையடுத்து, ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் எழுத்துப்பூர்வமான வாதம் நேற்று மதியம் தாக்கல் செய்யப்பட்டது. இதனால், இந்த வழக்கின் தீர்ப்பு வரும் திங்கட்கிழமை அல்லது விரைவில் பிறப்பிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story