சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்ட பணிகள் சுரங்கம் தோண்டும் பணியில் சிக்கல்


சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்ட பணிகள் சுரங்கம் தோண்டும் பணியில் சிக்கல்
x

கோப்புப்படம் 

ராட்சத சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் சென்னை வருவதில் தாமதம் ஏற்பட்டு உள்ளது.

சென்னை,

சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக, 63 ஆயிரத்து 246 கோடி ரூபாய் மதிப்பில் சுமார் 118 கிலோ மீட்டர் தொலைவுக்கு 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த திட்டத்தின் கீழ் உயர்மட்ட பாலம் மற்றும் சுரங்கப்பாதையில் ரயில்கள் இயக்கப்பட உள்ளன. சுரங்கப்பாதை தோண்டும் பணிகளை அடுத்த மாதம் முதல் மேற்கொள்ள சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் திட்டமிட்டு இருந்தது.

இதற்காக சீனாவில் இருந்து 23 ராட்சத சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் சென்னை கொண்டுவர முடிவு செய்யப்பட்டிருந்த‌து. ஆனால், இதுவரை 3 இயந்திரங்கள் மட்டுமே சென்னை வந்தடைந்துள்ளன.

மேலும், 20 இயந்திரங்கள் சென்னை வருவதற்கு தாம‌தம் ஏற்பட்டுள்ளதால், திட்டமிட்டப்படி சுரங்கம் தோண்டும் பணிகளை தொடங்குவதில் சவால் ஏற்பட்டுள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.


Next Story