சென்னை ஓபன் டென்னிஸ்: இறுதி போட்டியை கண்டுகளித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்


சென்னை ஓபன் டென்னிஸ்: இறுதி போட்டியை கண்டுகளித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
x
தினத்தந்தி 18 Sep 2022 3:29 PM GMT (Updated: 18 Sep 2022 4:08 PM GMT)

சென்னை நுங்கம்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் டென்னிஸ் போட்டியின் இறுதி ஆட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் கண்டுகளித்தார்.

சென்னை,

சென்னை ஓபன் பெண்கள் சர்வதேச டென்னிஸ் போட்டி நுங்கம்பாக்கத்தில் உள்ள டென்னிஸ் மைதானத்தில் கடந்த 10-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. சர்வதேச பெண்கள் டென்னிஸ் போட்டி சென்னையில் நடைபெறுவது இதுவே முதன்முறையாகும். இந்த டென்னிஸ் தொடரில் ஒற்றையர் பிரிவில் 32 வீராங்கனைகளும், இரட்டையர் பிரிவில் 16 ஜோடிகளும் என முன்னணி வீராங்கனைகள் பங்கேற்றனர்.

இந்த நிலையில் சென்னை நுங்கம்பாக்கம் மைதானத்தில் இன்று சர்வதேச மகளிர் டென்னிஸ் தொடரின் இறுதி சுற்று ஆட்டம் நடைபெற்று வருகின்றது. இறுதி போட்டியில் முதல்-அமைச்சர் மு.கஸ்டாலின் கலந்து கொண்டு நேரில் பார்வையிட்டு வருகின்றார். மேலும், இறுதி போட்டியில் வெற்றி பெறும் வீராங்கனைகளுக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பரிசுகளை வழங்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.




Next Story