சென்னை: ஜாம் பஜாரில் பீடா கடையில் போதை சாக்லேட்டுகள் விற்பனை - ஒருவர் கைது


சென்னை: ஜாம் பஜாரில் பீடா கடையில் போதை சாக்லேட்டுகள் விற்பனை - ஒருவர் கைது
x

சென்னை, ஜாம் பஜாரில் பீடா கடையில் போதை சாக்லேட்டுகள் விற்பனை செய்த ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை,

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தி நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில், சென்னை ஜாம் பஜாரில் உள்ள பீடா கடை ஒன்றில், போதை சாக்லெட் விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற போலீசார் சோதனை மேற்கொண்டதில், போதை சாக்லேட் விற்பனை செய்வதை கண்டுபிடித்தனர்.

அதையடுத்து கடையில் இருந்து 7 கிலோ போதை சாக்லேட்டுகளை போலீசார் பறிமுதல் செய்து விற்பனை செய்தவரை கைது செய்தனர். பீடா கடை நடத்தி வந்த பீகார் மாநிலத்தை சேர்ந்த சுரேந்தர் யாதவ் என்பது தெரியவந்தது.

மேலும் பீடா கடை நடத்தி வந்த பீகார் மாநிலத்தை சேர்ந்த சுரேந்தர் யாதவ் என்பது தெரியவந்தது. தொடர்ந்து அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பீகாரிலிருந்து போதை சாக்லேட்டுகளை வரவழைத்து, சென்னையில் விற்பனை செய்து வந்தது அம்பலமானது.


Next Story