தொடர் திருட்டில் ஈடுபட்ட சென்னை வாலிபர் கைது


தொடர் திருட்டில் ஈடுபட்ட சென்னை வாலிபர் கைது
x

திண்டிவனம் பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்ட சென்னை வாலிபர் கைது ரூ.8¾ லட்சம் நகைகள் பறிமுதல்

விழுப்புரம்

திண்டிவனம்

திண்டிவனம் பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்ட நபர்களை கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன் பேரில் பிரம்மதேசம் போலீசார் திண்டிவனம் அருகே உள்ள மன்னார்சாமி கோவில் பகுதியில் தீவிர ரோந்து பணியில் இருந்தனர். அப்போது அங்குள்ள டீ கடையில் சந்தேகத்துக்கிடமான முறையில் நின்றிருந்த மர்மநபரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது முன்னுக்குப் பின் முரணாக தகவல் சொன்னதால் அவரை பிடித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை செய்தனர். விசாரணையில் அவர் சென்னை அசோக்நகரை சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் வெங்கடேசன் என்கிற கலச வெங்டேசன்(வயது 36) என்பதும் கடந்த 2021-2022-ம் ஆண்டுகளில் திண்டிவனம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்தவர் என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து வெங்கடேசனை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து ரூ.8¾ லட்சம் மதிப்புள்ள நகைகளை பறிமுதல் செய்தனர்.


Next Story