தர்மபுரியில் நீச்சல் வீரர்களுக்கான செஸ் போட்டி


தர்மபுரியில்  நீச்சல் வீரர்களுக்கான செஸ் போட்டி
x

தர்மபுரியில் நீச்சல் வீரர்களுக்கான செஸ் போட்டி

தர்மபுரி

சென்னை மாமல்லபுரத்தில் வருகிற 28-ந் தேதி முதல் 10-ம் தேதி வரை 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெறுகிறது. இந்த போட்டிகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் போட்டிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக "நம்ம செஸ் நம்ம பெருமை" குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் தர்மபுரி செந்தில் நகரில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மாவட்ட விளையாட்டு பிரிவின் கீழ் இயங்கி வரும் ராஜாஜி நீச்சல் குளத்தில் நீச்சல் பயிற்சி பெறும் வீரர்களுக்கான செஸ் போட்டி நடைபெற்றது. நீச்சல் குளத்திலேயே நடந்த இந்த போட்டியில் 50-க்கும் மேற்பட்ட நீச்சல் பயிற்சி பெறும் வீரர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு விளையாடினர்கள். இதில் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் சாந்தி மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story