அரசு பள்ளியில் செஸ் போட்டி


அரசு பள்ளியில் செஸ் போட்டி
x

அத்தியூர்திருக்கை அரசு பள்ளியில் செஸ் போட்டி நடைபெற்றது.

விழுப்புரம்

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டம் காணை ஒன்றியம் அத்தியூர்திருக்கை அரசு மேல்நிலைப்பள்ளியில் ஊராட்சி ஒன்றிய அளவில் செஸ் போட்டி நடைபெற்றது. இப்போட்டிக்கு மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ஜெயச்சந்திரன், காணை ஒன்றியக்குழு தலைவர் கலைச்செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் ராஜாராமன் குத்துவிளக்கேற்றி போட்டியை தொடங்கி வைத்தார். காணை ஒன்றியக்குழு துணை தலைவர் வீரராகவன், ஊராட்சி கவுன்சிலர் முருகன், ஊராட்சி மன்ற தலைவர் பாண்டியன் மற்றும் பள்ளி ஆசிரிய- ஆசிரியைகள், 200-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்துகொண்டனர். இப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. முடிவில் உடற்பயிற்சி ஆசிரியர் சரவணன் நன்றி கூறினார்.


Related Tags :
Next Story